மழை வேண்டி யாக வேள்வி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் குட்லாடம்பட்டி அருவிக்கு அருகில் குரு விஷ்வாமித்ரா அறக்கட்டளை சார்பாக மழை வேண்டி யாகசாலை பூஜை நடந்தது. யாகசாலை பூஜையில் ஜல அக்னிகண்ட ஈஸ்வரலிங்கம் முன்பு அகத்தியர் ஜெனாசித்தர் தலைமையில் சதுரகிரி சண்முகம் சுவாமிகள், திருப்பரங்குன்றம் பண்டாரம் சுவாமிகள் மற்றும் வேதவிற்பனர்கள் வேதபாராயணம் மந்திரங்கள் முழங்கி யாகசாலை பூஜை செய்தனர்.
இதில் கருப்பையா எம்.எல்.ஏ., மாவட்ட கவுன்சிலர் செல்லப்பாண்டி, ஒன்றிய துணைத்தலைவர் ராஜேஷ்கண்ணா, கூட்டுறவு வங்கி தலைவர்கள் பாப்புரெட்டி, தனசேகரன், கூட்டுறவு வங்கி இயக்குநர் பங்களா மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர் அன்னதானம் நடந்தது.
பூஜை நடந்த அன்றே ஆலங்கட்டி மழை பெய்த்தது.